[X] Close

பாலாறு தடுப்பணை விவகாரம்: கைவிரித்த மத்திய அரசு

Palaru-Checkdam-Issue

பாலாற்றில் ஆந்திரப்பிரதேச அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இப்போதைக்கு நடவடிக்கை எடுக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

பாலாற்றில் தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்கக் கோரி, மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி. வேணுகோபால் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் சஞ்சய் குமார் பல்யான் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விஷயம் குறித்து அமைச்சக அதிகாரிகளுடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ள சஞ்சய் பல்யான், இதுகுறித்து 2006ஆம் ஆண்டிலேயே தமிழக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இரண்டு மாநில பிரதிநிதிகளின் கூட்டத்தை மத்திய நீர்வளத் துறை கூட்டியதாக கூறியுள்ள அமைச்சர், இரண்டு மாநிலங்களும் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருந்ததால் கூட்டத்தில் தீர்வு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த உத்தரவிடுமாறு மீண்டும் கடந்த ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் அமைச்சர் சஞ்சய் பல்யான் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close