[X] Close

இதுக்கெல்லாமா துப்பாக்கிச் சூடு? அக்கப்போரா இருக்கே!

Uttar-Pradesh--Dog-s-nature-call-leads-to-shooting--four-injured

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்று இயற்கை உபாதையை தணித்ததால் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு நடந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Advertisement

பெய்ரேலியில் முன்னா யாதவ் என்பவர் வளர்க்கும் நாயானது, அருகில் இருந்த பூரன் லால் என்பவரின் இரு சக்கர வாகனம் மீது சிறுநீர் கழித்துள்ளது. இதனால், முன்னா யாதவுக்கும், பூரன் லாலுக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது. இந்நிலையில், முன்னா யாதவ் திடீரென பூரன்லால் குடும்பத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 4 பேர் காயமடைந்தனர். ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னா யாதவ் தலைமறைவாகிவிட்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close