நடிகர் சஞ்சய் தத்தை மகாராஷ்டிர அரசுதான் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்தது என ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அத்தீர்மானம் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுபோல 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தார்.
தற்போது 7 பேரின் விடுதலை குறித்த முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநரின் கையிலேயே உள்ளது. ஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என பல தரப்பில் இருந்து குரல்கள் ஒலித்து வருகின்றன.
இதனிடையே மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என பேரறிவாளன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஆர்டிஐ, நடிகர் சஞ்சய் தத்தை மகாராஷ்டிரா அரசுதான் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்தது என தெரிவித்துள்ளது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?