Published : 04,May 2017 09:19 AM

சமந்தாவுக்காக காதலர் வாங்கிய லேட்டஸ்ட் கார்!

NagaChaitanya-Received-brand-new-BMW7-Series-Car

நடிகை சமந்தாவின் காதலரும் தெலுங்கு ஹீரோவுமான நாக சைதன்யா, லேட்டஸ்ட் பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார்.

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். ஹைதராபாத்தில் சொகுசு அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் இவர்கள், தங்களுக்காக லேட்டஸ்ட் சொகுசு கார் ஒன்றை வாங்க முடிவு செய்தனர். கார்களின் காதலர்களான இவரும் லேட்டஸ்ட் பிஎம்டபிள்யூ மாடல் காரை வாங்க முடிவு செய்து முன்பதிவு செய்திருந்தனர். இந்த கார், நேற்று நாக சைதன்யாவிடம் டெலிவரி செய்யப்பட்டது. காரை வாங்கிய அவர், அன்னபூர்ணா ஸ்டூடியோவில் ஆசை தீர ரவுண்ட் அடித்தாராம்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்