12 வயது மகனை தூக்கிலிட்டு கொன்ற தந்தை: வீடியோ எடுத்த மகள்! - பெங்களூருவில் அதிர்ச்சி!

12 வயது மகனை தூக்கிலிட்டு கொன்ற தந்தை: வீடியோ எடுத்த மகள்! - பெங்களூருவில் அதிர்ச்சி!
12 வயது மகனை தூக்கிலிட்டு கொன்ற தந்தை: வீடியோ எடுத்த மகள்! - பெங்களூருவில் அதிர்ச்சி!

பெங்களூருவில் தந்தையால் தனது தம்பி கொலை செய்யப்படுவதை, சகோதரியே வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விபுதி புரா பகுதியை சேர்ந்த சுரேஷ். இவர் கீத்பாய் என்ற மனைவி, 12 வயது மகன் மற்றும் 17 வயது மகளுடன் பெங்களூரு விபுதிநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர்கள் நடத்தி வந்த சிட்பண்ட் நஷ்டம் அடையவே பலரிடமும் கடன் வாங்கி நிலைமையை சமாளித்துள்ளனர். ஆனால் கடனை திருப்பிக்கொடுக்க வழி இல்லாமல் திணறியுள்ளார் சுரேஷ். ஒருகட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, சுரேஷ் தனது 12 வயது மகனான வருணை தூக்கிலிட்டு கொலை செய்துள்ளார்.இந்த சம்பவத்தை அவரது 17 வயது மகள் வீடியோ எடுத்துள்ளார். மேலும் சுரேஷ் தனது மனைவி கீதாவை தற்கொலை செய்து கொள்ள நிர்பந்தித்ததை அடுத்து, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்து சுரேஷும், அவரது மகளும் தற்கொலை செய்ய வேண்டுமென்ற நிலையில் வீட்டில் இருந்து சத்தம் வருவதை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரிடம், கடன் தொல்லை காரணமாக தனது மனைவியும், மகனும் தற்கொலை செய்து கொண்டதாக சுரேஷ் தெரிவித்தார். தீவிர விசாரணைக்கு பிறகு சுரேஷ் தனது மகனை கொலை செய்ததும், தன் மனைவியை தற்கொலை செய்துகொள்ள நிர்பந்தித்ததும் தெரியவந்தது. அதற்கு ஆதரமாக அவர் மகள் எடுத்த வீடியோ காட்சி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com