[X] Close

அவனை புடிங்கய்யா: கணவனுக்கு எதிராக திரண்ட 3 மனைவிகள்

Man---s-3-ex-wives-thwart-his-fourth-wedding

மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டு நான்காவது திருமணத்துக்கு திட்டம் போட்ட இளைஞரை, போலீஸ் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் டேனிஷ். வயது 30. இவருக்கும் இவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2013ல் திருமணம் நடந்தது. சில நாட்களில் திருமணம் கசக்க, உன்னை விவாகரத்து செய்யப்போகிறேன் என்று சொன்னார் டேனிஷ். சம்மதிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டினார். அந்தப் படம், அந்தப் பெண்ணுடன் டேனிஷ் எடுத்துக்கொண்ட ஆபாச படம். வேறு வழியின்றி விவாகரத்துக்கு சம்மதித்தார் அந்தப் பெண். தலாக் மூலம் விவாகரத்து பெற்றார் டேனிஷ்.

பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் டேனிஷ். ஒரு வருடம் குடும்பம் இனிமையாகச் செல்ல, அங்கும் இதே மிரட்டலை ஆரம்பித்தார். பிறகு தலாக் மூலம் விவாகரத்துப் பெற்றார். பின் 15 வயதுடைய தனது உறவுக்கார பெண்ணை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தார். அந்தப் பெண்ணை தனக்கு திருமணம் செய்து தராவிட்டால், அவருடன் எடுத்துக்கொண்ட ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவேன் என்று மிரட்டினார். வேறு வழியில்லாமல் அவருக்கே திருமணம் செய்து வைத்தனர். அந்தச் சிறுமியை அடித்து துன்புறுத்தினாராம் டேனிஷ்.


Advertisement

இதற்கிடையே நான்காவது திருமணத்துக்கு டேனிஷ் போட்ட திட்டம் வெளியே கசிய, மூன்று மனைவிகளும் ஒன்று சேர்ந்து போலீசுக்கு சென்றிருக்கிறார்கள். அவனை வெளியே விடக்கூடாது என அவர்கள் ஒன்று சேர்ந்து புகார் கொடுக்க, போலீசார் டேனிஷை கைது செய்து ’உள்ளே’ தள்ளியிருக்கிறார்கள்.


Advertisement

Advertisement
[X] Close