[X] Close

அப்பா எச்சரித்தும் செல்ஃபி: மதுரை மாணவி மும்பையில் பலி

selfie-death

எச்சரிக்கை செய்த அப்பாவை உதாசீனப்படுத்திவிட்டு பாறையில் நின்று செல்ஃபி எடுத்த மதுரை மாணவி உயிரிழந்தார்.

மதுரையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு ராமேஸ்வரி, மீனாட்சி பிரியா (வயது 21) என்ற மகள்கள். மீனாட்சி பிரியா விருதுநகரில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். சமீபத்தில் இவருக்கு இறுதி செமஸ்டர் தேர்வு முடிந்தது. விடுமுறையை கொண்டாட அவர் குடும்பத்தினருடன் கடந்த 30-ம் தேதி மும்பை சென்றார். அந்தேரி பகுதியில் தங்கியிருந்தனர். வாடகை கார் அமர்த்தி ஒவ்வொரு பகுதியாக சுற்றிப் பார்த்தனர். கடந்த திங்கட்கிழமை பாந்திரா சென்றனர். அங்கு பேண்டு ஸ்டாண்ட் பகுதிக்கு சென்றனர். அது கடல் பகுதி.

கோட்டை பகுதியில் இருந்த ஒரு பாறையின் மீது நின்று மீனாட்சி பிரியா, குடும்பத்தினருடன் செல்பி எடுக்க நினைத்தார். அப்பா ராஜேஷ், வேண்டாம் என்று எச்சரித்தார். அதையும் மீறி மீனாட்சி செல்ஃபி எடுக்க முயன்றாராம். அப்போது ராட்சத அலை வந்தது. இதில் மீனாட்சி பிரியா நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் உதவி கேட்டு கதறினர். அது அபாயகரமான பகுதி என்பதால் யாராலும் அவரை மீட்க முடியவில்லை.


Advertisement

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு மீனாட்சியின் உடலைத் தேடினர். பின்னர் பாந்திரா – ஒர்லி கடல் வழி மேம்பாலம் அருகே உடல் மீட்கப்பட்டது. அவர் உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லப்பட்டதாக, பாந்திரா போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags : mumbai bandstand bandhrabandhra bandstand mumbai
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close