Published : 04,May 2017 05:20 AM

7 ஏக்கரில் பிரமாண்ட பங்களா: அட்ரஸ் மாறினார் தோனி

dhoni-nuys-new-bungalow

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நவீன வசதிகளை உள்ளடக்கிய புது பங்களா ஒன்றை ஏழு ஏக்கரில் வாங்கியுள்ளார்.

ராஞ்சி நகரின் தொரந்தா பகுதியில் சிறிய வீட்டில் வசித்துவந்த டோனி, கிரிக்கெட் வீரர் ஆன பிறகு, மூன்று மாடி கொண்ட வீட்டில் குடிபெயர்ந்தார். அங்கு அவர் மனைவி சாக்‌ஷி, மகள் ஷிவா, அப்பா பான் சிங், அம்மா, தேவிகா தேவியுடன் வசித்து வந்தார்.

இப்போது ராஞ்சி ரிங் ரோடு பகுதியில் ’கைலாஷ்பதி’ என்ற புதிய பங்களாவை வாங்கியுள்ளார். ஏழு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பங்களாவில், இண்டோர் ஸ்டேடியம், நெட் பிராக்டிஸ் பண்ணும் இடம், நீச்சல் குளம், மாடர்ன் உடற்பயிற்சி நிலையம் உட்பட பல்வேறு நவீன வசதிகள் உள்ளது. இந்த பங்களாவுக்கு அக்‌ஷய திருதியை தினமான ஏப்ரல் 28-ம் தேதி குடிபெயர்ந்திருக்கிறது தோனி குடும்பம். ஐபிஎல் போட்டியில் விளையாடி வருவதால் கிரஹப்பிரவேசத்தில் தோனி\ கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்