[X] Close

பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது - ப.சிதம்பரம்

It-s-a-real-face-of-bjp-government-says-P-Chidamparam

பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்‌பட்டுள்ளது. அதன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். மேலும் '' புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள். பள்ளிகளில் மும்மொழித் திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள். 

இந்தி மொழி கட்டாயப் பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள். பாஜக தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போதே சுட்டிக் காட்டியிருந்தேன். சமஸ்கிருத மொழியைப் பரப்புவோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இந்த முயற்சிக்கு தேர்தல் அறிக்கை சூட்டிய தலைப்பு 'பாரதிய மொழிக் கலாச்சாரம்!'' என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close