தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் டிஜிபியாக நியமிக்கப்பட்ட அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபி சிறப்பு அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் போக்குவரத்துக்கழக ஊழல் தடுப்பு டிஜிபியாக ஜாங்கிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு காவல்துறையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை எனக்கூறியவர் ஜாங்கிட்.
சிறப்பு டிஜிபியாக இருந்த விஜயகுமார் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி எஸ்.பி ராஜேஸ்வரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மின்சார வாரிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஜிபியாக தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலக் குற்ற ஆவணக் காப்பக டிஜிபியாக கரண் சின்ஹா, தலைமையக ஏடிஜிபியாக சீமா அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவின் கூடுதல் டிஜிபியாக ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஷகில் அக்தர், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக ஆபாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தாமரைக்கண்ணன் தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணம் தாக்கல் செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் செந்தாரமைக்கண்ணன் இருந்தார்.
சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர், ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக சங்கர் ஜூவால், தொழில் நுட்ப பிரிவு ஏடிஜிபியாக அசோக்குமார் தாஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளி, சாலை பாதுகாப்பு பிரிவு ஐஜியாக பிரமோத் குமார், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக முருகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்