[X] Close

குட்டியுடன் பதுங்கிய புலிகள்: பொதுமக்கள் பீதி

tiger-cctv-alert

கூடலூர் அருகே தனியார் தோட்டத்திற்குள் 2 புலிகள் பதுங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பாட்டவயல், கொட்டாடு பகுதியை சேர்ந்தவர் விஜயன். புல் அறுப்பதற்காக நேற்று வந்தார். அப்போது அங்குள்ள கோவில் அருகே குட்டியுடன் புலி ஒன்று வந்துள்ளது. விஜயனை கண்ட புலி அருகில் இருந்த பராமரிக்கப்படாத தேயிலை தோட்டம் ஒன்றிற்குள் புகுந்து கொண்டது. தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் வந்து பார்த்த பார்த்த போது, புலி உறுமும் சத்தம் கேட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினரும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். அப்போதும் புலி உறுமும் சத்தம் கேட்டுள்ளது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து புலிகளை விரட்ட முயன்றுள்ளனர். ஆனால் புலி ஆக்ரோஷமாக உறுமியதை அடுத்து அதனை விரட்டும் முயற்சி கைவிடப்பட்டது. புலி விரட்டப்படும் பட்சத்தில் அது குடியிருப்பு பகுதிக்குள் ஓடி, பொதுமக்களை தாக்க அதிக வாய்ப்பு இருப்பதால், அதனை விரட்ட வேண்டாம் என உயர் அதிகாரிகள் உத்திரவிட்டனர்.


Advertisement

தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்தியுள்ளனர். பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் தனியாக நடமாட வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். புலி அப்பகுதியில் பதுங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Tags : tiger nilgirinilgiri tiger

Advertisement

Advertisement
[X] Close