Published : 31,May 2019 09:48 AM

உலகக் கோப்பை : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு

West-Indies-vs-Pakistan--World-Cup-2019--West-Indies-win-toss--ask-Pakistan-to-bat

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று லண்டனில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து, இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 

இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இங்கிலாந்தில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. சம பலத்துடன் உள்ளதால், இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தான் தொடக்கத்திலே முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் இமாம் அல் ஹாக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்துள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்