[X] Close

ஆசை‌ வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

police-arrested-a-man-with-a-sexually-abused-minor-girl-in--Erode

ஈரோடு, சத்தியமங்கலம் அருகே ஆசை‌ வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் போக்சோ‌‌ சட்‌டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்‌. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்ஃபிகிரது. இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையில் புகார் அளித்தனர். 

Image result for பாலியல் வன்கொடுமை


Advertisement

இது தொடர்பாக விசாரணை நடத்திய புஞ்சைபுளியம்பட்டி போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் சரளைவிளை கிராமத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்பொது புஞ்சைபுளியம்பட்டி பஸ்நிலையத்தில் சிறுமி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து புன்சைபுளியம்பட்டி போலீசார் ஜெயசீலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close