[X] Close

டிக்டாக் பிரபலம் மோகிர் மோர் கொலை வழக்கு: சந்தேகிக்கப்படும் நபர் கைது

Prime-accused-in-tik-tok-celebrity-mohit-mor-s-murder-arrested

டிக் டாக் பிரபலம் மோகித் மோர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

டெல்லியை சேர்ந்த டிக் டாக் பிரபலம் மோகித் மோர். கடந்த 21-ஆம் தேதி அடையாளம் தெரியாத 3 நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் மோகித் மோர் கொலை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சந்தீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோகித் மோர் உடன் ஏற்பட்ட நிலத் தகராறு பிரச்னையால், சந்தீப் ஆட்களை ஏவி அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.


Advertisement

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சந்தீப் வீட்டில் போலீசார் சோதனையிட்டு அவரை கைது செய்தனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீட்டிற்குள் ரகசிய அறை ஒன்றை ஏற்படுத்தி அதில் சந்தீப் வசித்து வந்ததாகவும், வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க செல்போன்களை பயன்படுத்தாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. சந்தீப் ஏற்கெனவே 5 குற்ற சம்பவங்களில் தொடர்பு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close