Published : 29,May 2019 02:25 PM

“ப்ரே ஃபார் நேசமணி” - ட்விட்டர் இந்திய ட்ரெண்டிங்கில் வடிவேலு

Pray-for-Neasamani-is-India-trending-in-Twitter

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் வடிவேலுவின் ஒரு சினிமா கதாபாத்திரத்தை இந்திய அளவில் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் என்பது ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இது நாள்தோறும் ஒரு ட்ரெண்ட்டிங், நகைச்சுவை, மீம்ஸ், கிண்டல், கேலி என எல்லை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தேர்தல்களின் வெற்றிகளையும், பிரதமர் மற்றும் அதிபர்களை பாதித்துவிடும் என்ற அளவிற்கு சமூக வலைத்தளங்கள் உலகை மிரட்டி வருகின்றன. பிரதமர், முதலமைச்சர், சினிமா நடிகர், விளையாட்டு வீரர், பிரபலம் என யாரையும் ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து ட்ரெண்ட் ஆக்கி விட முடியும். 

இதனால் பல தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் மீம்ஸ் இவற்றை வெறுக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட நெட்டிசன்கள், நாள்தோறும் ஏதேனும் ஒன்றை ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். அத்துடன் ஆயிரக்கணக்கான மீம்ஸ் தயாரித்து பரப்பி வருகின்றனர். 

ஆனால் இந்த மீம்ஸ் அனைத்திலும் கதாநாயகனாக இருப்பவர் நகைச்சுவை நடிகர் வடிவேலுதான். இதனால் அவர் சினிமாக்களில் நடிக்காவிட்டாலும், நெட்டிசன்களால் சமூக வலைத்தளங்களில் மன்னனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 

அந்த வகையில் இன்று #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கியுள்ளனர். சிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது நேசமணி தலையில் விழுந்தது என ஒரு நெட்டிசன் பதிலளித்துள்ளார். நேசமணி என்ற கதாபாத்திரம் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் பெயர் ஆகும். அந்தப் படத்தில் பெயிண்ட்டிங் காண்ட்ராக்டராக வரும் வடிவேலு, ஜமீன் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கச் சென்று பல லூட்டிகளை அடித்திருப்பார். இதைக்கொண்டு தற்போது ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்