[X] Close

தெலுங்கு டிவி நடிகர் தூக்கிட்டு தற்கொலை

Telugu-TV-actor-Pradeep-Kumar-commits-suicide

தெலுங்கு தொலைக்காட்சி நடிகர் பிரதீப் குமார் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 29. அல்காபுரி காலனியில் உள்ள அவரது வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரதீப்பின் உடல் காணப்பட்டது.


Advertisement

நேற்றிரவு பிரதீப்பின் அறைக்கு அவரது மனைவி சென்றுள்ளார். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் பிரதீப் குமார் காணப்பட்டிருக்கிறார். உடனே பதறிப்போன அவரது மனைவி, நண்பர் ஒருவருடன் சேர்ந்து பிரதீப் குமாரின் உடலை கீழிறக்கி அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் பிரதீப் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நடிகரின் தற்கொலைக்கு முக்கிய காரணம் தெரியாவிட்டாலும், முந்தைய நாளில் கணவன் மனைவி இடையே சிறிய சண்டை நடந்த தகவல் கிடைத்திருப்பதாக காவல் ஆய்வாளர் ராமச்சந்திர ராவ் தெரிவித்துள்ளார்


Advertisement

Advertisement

Advertisement
[X] Close