[X] Close

தாய்க்கு உணவளிக்க பிச்சை எடுக்கும் 6 வயது மகள் ! - கண்கலங்க வைக்கும் புகைப்படம்

A-6-year-old-girl-has-been-begging-to-feed-her-mother

நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாய்க்கு உணவளிக்க 6 வயது மகள் பிச்சை எடுத்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பொதுவாக ஒரு 6 வயது குழந்தையை பெற்றோர்கள் எப்படி கவனித்துக் கொள்வார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் 6 வயது சிறுமி ஒருவர், நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தாயை மகள் போல கவனித்து வருகிறார். இந்தச் சம்பவம் காண்போர் அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.


Advertisement

கர்நாடகா மாநிலம் கோப்பால் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி பாக்யஸ்ரீ. இவரின் தாய் கடந்த சில வாரங்களாக நோயுற்று காணப்பட்டார். ஆனால் பாக்யஸ்ரீக்கு அப்பா கிடையாது. அம்மாவை மட்டுமே நம்பி இருந்த பாக்யஸ்ரீ, அவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் என்ன செய்வது என்று நிலை புரியாமல் தவித்தார். கையிலும் பணம் இல்லை. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் தாய்க்கு தேவையான நேரத்தில் உணவளிக்க பாக்யஸ்ரீயிடம் கையில் காசு இல்லை. இதனால் பிச்சை எடுக்க ஆரம்பித்தார் பாக்யஸ்ரீ. அந்த காசு மூலம் உணவு வாங்கி அதனை தாய்க்கு ஊட்டினார். இந்த சம்பவம் சிறியவர்கள், பெரியவர்கள் என காண்போர் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

இந்த சம்பவம் வெளியே தெரியவர பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் இருவரையும் சந்தித்து பேசியுள்ளனர். மற்றும் அவர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுக்கவும் முன்வந்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close