Published : 03,May 2017 06:08 AM

அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி

supreme-court-questions-tn-govt

மோசடி புகாரில் சிக்கிய அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கட்டட ஒப்பந்தகாரரிடம் 30 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்த வழக்கில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை? புகார் தெரிவித்த பின்னர் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் என்றால் சட்ட விதிகளுக்கு மேலானவரா என கேள்வி எழுப்பியது. வழக்கு தொடர்பான ஆவணங்களை வரும் 8 ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்