Published : 25,May 2019 05:08 PM

குடியரசுத் தலைவரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி

amitsha-and-modi-meet-ramnath-govind

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் 303 இடங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 16 வது மக்களவையை குடியரசுத் தலைவர் கலைத்து உத்தரவிட்டார். 

இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பாஜக. நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  

இந்நிலையில், பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்ற தகவல் அடங்கிய கடிதத்தினை ராம்நாத்திடம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வழங்கினார்.  அவருடன் பிரகாஷ் சிங் பாதல், ராஜ்நாத் சிங், நிதீஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான், சுஷ்மா சுவராஜ், உத்தவ் தாக்கரே, நிதின் கட்கரி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் தலைவர்கள் சென்றனர். 

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரின் ஆதரவு கடிதங்களும் அவரிடம் வழங்கப்பட்டன.  இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார்.  அவரை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.  அதன்படி 30 ஆம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்