விருதுநகரில் தபால் ஊழியர்களின் அலட்சியத்தால் மாணவர் ஒருவரது கல்லூரி படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் உள்ள பாதானக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் முனிய ராஜாஜி. இவர் 12ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்துள்ளார். மே 16ஆம் தேதி கலந்தாய்வில் பங்கேற்க வருமாறு, அவருக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதமோ மே 22ஆம் தேதிதான் முனியராஜாஜிக்கு கிடைத்துள்ளது. இதனால், கலந்தாய்வில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
இதுகுறித்து தபால் நிலையத்தில் கேட்டதற்கு, 4 ஊழியர்கள் விடுப்பில் இருந்ததால் தாமதமாகிவிட்டதாக கூறியுள்ளனர். அலட்சியமாக செயல்பட்ட தபால்நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கருணையுடன் தனக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் முனியராஜாஜி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அருப்புக்கோட்டை தபால் நிலைய உதவி கண்காணிப்பாளர் ஜெயராமிடம் கேட்டதற்கு, விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்