குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி
குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று இரவு சந்தித்து பிரதமர் மோடி ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

16வது மக்களவை கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். 16வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவரிடம் மத்திய அமைச்சரவை அளித்திருந்த நிலையில், அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற 542 எம்பிக்களை கொண்டு அடுத்த வாரம் 17வது மக்களவை அமைக்கப்பட உள்ள நிலையில் 16வது மக்களவை கலைக்கப்பட்டுள்ளது. 

17வது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 542 எம்பிக்களின் பட்டியல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்தப் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் அளித்தார். இதற்கிடையே, இன்றிரவு குடியரசுத்தலைவரை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். இரவு 8 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. மேலும் இந்த முறை அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com