[X] Close

கொக்கரித்த கோரி.. டெல்லியிடம் வீழ்ந்தது ஐதராபாத்

hyderabad-loses-in-ipl

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில், முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக, யுவராஜ் சிங் 41 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் வார்னர் 30 ரன்களை விளாசினார். 186 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஆண்டர்சன் 41 ரன்களும், கருண் நாயர் 39 ரன்களும் எடுத்தனர். பின் வந்த கோரி ஆண்டர்சன், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 24 பந்துகளில், 2 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 41 ரன்கள் விளாச, முடிவில் 19.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்களை எடுத்த டெல்லி அணி ஐதராபாத்தை வீழ்த்தியது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close