[X] Close

இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு

Congress-Meeting-today-at-delhi

மக்களவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது.

மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ்‌ கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. வயநாடு தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட ராகுல் காந்தி அங்கு வெற்றி பெற்றார் என்றாலும், தனது ஆஸ்தான தொகுதியான அமேதியில் தோல்வியைச் சந்தித்தார்.


Advertisement

ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றிலும் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக்கூட்டம் கூடுகிறது. இதில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இதற்கு பொறுப்பேற்றுக்கொண்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close