[X] Close

பெரும்பாலான இடங்களில் 3-வது இடத்தை பிடித்த அமமுக..!

AAMK-got-third-place-in-many-constituency

தமிழகத்தி‌ல் 38 தொகுதிகளுக்கு நடந்த மக்களவைத் தேர்தலில், பெரும்பாலான இடங்களில்‌ அமமுக அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.


Advertisement

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு இடையே, பல தொகுதிகளில் நேரடியான போட்டி நிலவியது. இதில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி முதலிடத்தையும், அதற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்று அதிமுக கூட்டணியும் இடம் பெற்றிருந்தது.


Advertisement

இந்நிலையில், மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே அதிக அளவில் போட்டி நடைபெற்றது. இதில் பரிசுப் பெட்டி சின்னத்துடன், 38 தொகு‌திகளிலும் சுயேச்சையாக போட்டியிட்ட அமமுக, அரக்கோணம், சிதம்பரம், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம் என 21 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு என முக்கிய நகரங்கள் உள்பட 11 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, ‌நாமக்கல் மற்றும் பெரம்பலூர் என 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close