Published : 23,May 2019 01:27 PM
‘சவுகிதார்’ அடைமொழியை அகற்றினார் பிரதமர் மோடி

ட்விட்டர் பக்கத்தில் தன் பெயருக்கு முன்பாக இருந்த அடைமொழியை மோடி அகற்றி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சவுகிதார்’ என்பதை நீக்கியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சவுகிதார் என்பதை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவேண்டும். அதன்படி என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து சவுகிதார் என்ற பெயர் அகன்றுள்ளது. ஆனால் என்னுடைய மனதில் சவுகிதார் என்பது நீங்காத இடம் பிடித்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் சவுகிதாராக செயல்பட்டு நாட்டை மதச்சார்பு மற்றும் ஊழல் நிறைந்தவர்களிடம் இருந்து காத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.