“பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” - ட்விட்டரில் மு.க. ஸ்டாலின்

“பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” - ட்விட்டரில் மு.க. ஸ்டாலின்
“பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” - ட்விட்டரில் மு.க. ஸ்டாலின்

அடுத்த 5 வருடங்களுக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. முடிவில் கிட்டத்தட்ட வெளியாகிவிட்ட நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் 38 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ''தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். ஜனநாயக முறைப்படி ஆட்சியை பிரதமர் மோடி நடத்துவார் என்று நம்புகிறோம்; விரும்புகிறோம். அடுத்த 5 வருடங்களுக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தலை வணக்கம் தமிழகமே. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com