Published : 21,May 2019 04:54 AM

அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்- ஓபிஎஸ்

admk-in-bjp-cabinet--ops-answered

பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் கடந்த 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்தலுக்கு பிறகு வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்தும், பாஜகவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. 250-க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக பெருவாரியான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியான பின்புதான் நாட்டில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பது தெரியவரும்.

இந்நிலையில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், அதன் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மே 23-ஆம் தேதி நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதனிடையே, அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்று கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்