[X] Close

சென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி

Sensex--Nifty-points-increase-to-Sky---Business-Men-are-Happy

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காரணமாக பங்குச் சந்தைகள் அபார உயர்வு கண்டுள்ளன.


Advertisement

மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெல்லும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து க‌ணிப்புகள் அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல், பங்கு வணிகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1422 புள்ளிகள் அதிகரித்து 39 ஆயிரத்து 352 புள்ளியில் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 421 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 828 புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது. 

இது கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை காணாத உயர்வாகும். தேர்தலுக்கு பின்னர் அமையும் நாடாளுமன்றம் யாருக்கும் பெரும்பான்மையில்லாமல் தொங்கு நாடாளுமன்றமாக அல்லாமல், வலிமையான ஒன்றாக இருக்கும் என்ற கணிப்புகள்தான் இந்த ஏற்றத்திற்கு காரணம் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்சிகள் இணைந்த கூட்டணி அரசு அமைந்தால் பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவது கடினமாக இருக்கும் என்ற அச்சம் சந்தையில் இருந்ததாகவும், ஆனால் அது தற்போது அகன்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close