Published : 02,May 2017 05:47 AM

மாட்டிறைச்சி சர்ச்சை: நடிகை கஜோல் விளக்கம்

kajol-clears-the-air

மாட்டிறைச்சியில் செய்த உணவை வீடியோவாக சமூக வலைத் தளத்தில் நடிகை கஜோல் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கஜோல் சமீபத்தில் சமூக வலைதளத்தில், நண்பர் ஒருவருடன் இறைச்சி சாப்பிட்ட வீடியோவை பதிவு செய்திருந்தார். கஜோல் சாப்பிட்டது தடை செய்யப்பட்ட மாட்டிறைச்சி என்று அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இதற்கு நடிகை கஜோல் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

இதுபற்றி டிவிட்டரில் கூறும்போது, ’அது மாட்டிறைச்சி என்று சொல்லப்படுவது தவறான தகவல். வீடியோவில் காட்டப்பட்டது எருமை மாட்டின் இறைச்சி. இது சட்டப்பூர்வமாக கிடைக்கிறது. இது மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதாலும், மத உணர்வுகளை புண்படுத்தும் என்பதாலும், இந்த விளக்கத்தை அளிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்