[X] Close

பங்குச்சந்தைகளில் அபார உயர்வு : மீண்டும் பாஜக ஆட்சி ?

Rs-3-2-lakh-crore-added-to-investor-kitty-as-exit-polls-Within-60-secs-in-India

மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என கருத்துக்கணிப்புகள் எதிரொலியால் பங்குகளின் மதிப்பு ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. 


Advertisement

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானதன் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. மதியம் 2 மணியளவில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஆயிரத்து 216 புள்ளிகள் அதிகரித்து 39 ஆயிரத்து 147 புள்ளிகளில் வணிகமாகியது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 360 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 766 புள்ளிகளில் வர்த்தகமாகியது. 

Related image


Advertisement

பங்குச் சந்தைகளில் கணிசமான உயர்வைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில், முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்த பங்குகளின் மதிப்பு சுமார் 3.2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்தது. மக்களவைத் தேர்தல் நேற்றுடன் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், நேற்று மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் ‌கணிப்புகள் வெளியாகின. அதில், பாரதிய ஜனதா அணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் சந்தை எதிர்பார்ப்பை விட சிறப்பாக இருந்தே அதன் ஏற்றத்திற்கு காரணம் என பங்குச் சந்தை ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும் வேறு பல சவால்கள் காத்துள்ளதால் இந்த ஏற்றம் தொடரும் என கூற முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close