[X] Close

வெஸ்ட் இண்டீஸ் மாற்றுவீரர் பட்டியலில் பிராவோ, பொல்லார்ட்!

Dwayne-Bravo--Kieron-Pollard-picked-as-World-Cup-reserves

உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில், மாற்று வீரர்கள் பட்டியலில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட டிவைன் பிராவோ பெயர் இடம்பெற்றுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த அணியில் கிறிஸ் கெய்ல், ரஸல், ஹெட்மயர், டேரன் பிராவோ, ஷாய் ஹோப் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். மூத்த வீரர்களான பொல்லார்ட், சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரைன் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை. இந்நிலையில் மாற்று வீரர்கள் பட்டியலில் பொல்லார்ட், டிவைன் பிராவோ பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

மாற்றுவீரர்களான 10 பேர் கொண்ட பட்டியலை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. இதில் பொல்லார்ட், பிராவோ, ரோஸ்டன் சேஸ், கீமோ பால், ஷான் டோவ்ரிச், ஜான் கேம்பர், கார்டர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 


Advertisement

35 வயதான வெய்ன் பிராவோ, அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த  சர்வதேச போட்டிகளிலும் ஆடவில்லை. இந்நிலையில் அவரது பெயர் வெஸ்ட் இண்டீஸ் அணி பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அதே போல பொல்லார்டும் கடைசியாக, 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு நாள் போட்டியில் ஆடியிருந்தார். அதற்குப் பின் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அவர் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close