[X] Close

இத்தாலி டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் நடால்

Italian-Open--Novak-Djokovic-to-play-Rafael-Nadal-in-final

இத்தாலி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரஃபெல் நடால் தகுதி பெற்றுள்ளார். 

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரஃபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ்சை (கிரீஸ்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் களிமண் தரை போட்டியில் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது முதல்முறை. 

இறுதிப்போட்டியில் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை, நடால் எதிர்கொள்கிறார். தொடரில் இறுதிப் போட்டியில் முதல் இரு நிலை வீரர்கள் ஆடவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

பெண்கள் ஒற்றையர் பிரிவில், 42-ம் நிலை வீராங்கனையான ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close