மதுரை மாநகரில் கடந்த 2 ஆண்டுகளில் 10 கிலோ தங்கச் சங்கிலிகள் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
மதுரையில் நாளுக்கு நாள் வழிப்பறி கொள்ளை அதிகரித்து வரும் வேளையில், அதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் மதுரையில் நடைபெற்ற வழிப்பறிகள் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெற்ற புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், 2017-ஆம் ஆண்டில் மட்டும் மதுரையில் 173 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 6.7 கிலோ தங்க நகைகள் பறிபோனதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், காவல்துறையினர் சுமார் 2.7 கிலோ தங்க நகைகளை மீட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், 2018-ஆம் ஆண்டில் 132 வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், சுமார் 3 கிலோ தங்கச் சங்கிலிகள் பறிபோனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், சுமார் 1.7 கிலோ தங்கச் சங்கிலிகளை காவல்துறையினர் மீட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வழிப்பறி குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் மாநகர் முழுவதும் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக மாநகர ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்