Published : 16,May 2019 02:29 PM
‘நோ பால்’ வீசியதாக கேலி செய்த ஐசிசி - பதிலடி கொடுத்த சச்சின்

தன்னை நகைச்சுவையோடு கேலிச் செய்து ட்விட்டரில் பதிவிட்ட ஐசிசிக்கு, பதிலளித்துள்ளார் சச்சின்.
வினோத் காம்பிளியுடன் பயிற்சி செய்யும் காணொளியை ஒன்றினை சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டார். அந்தக் காணொளியில், சச்சின் பந்துவீச, காம்பிளே பேட்டிங் செய்கிறார். சச்சின் சில முறை ஓடிவந்து பந்துவீசுவது போல் உள்ளது.
இந்த வீடியோவை கிண்டல் செய்யும் வகையில் ஐசிசி ஒரு பதவினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அதாவது சச்சின் பந்துவீசும் போது கிரீஸை விட்டு வெளியேறியதால், அதற்கு மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த நடுவர் ஸ்டீவ் பக்னர் நோ பால் வழங்குவது போல் புகைப்படத்தை பதிவிட்டு கேலியாக ஐசிசி விமர்சித்தது. ஐசிசியின் இந்தப் பதிவு வைரலாக பகிரப்பட்டது.
ஐசிசியின் கிண்டலுக்குப் பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள சச்சின், குறைந்தபட்சம் தான் இந்த முறை பலிவுங் செய்வதாகவும், நடுவரின் முடிவே இறுதியானது எனவும் தெரிவித்துள்ளார். நடுவர் ஸ்டீவ் பக்னர், சச்சினுக்கு பல சர்ச்சைக்குரிய அவுட்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
24 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்த சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 34,357 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற சாதனை அவர் வசம் உள்ளது.
டெஸ்டில் 51, ஒருநாள் தொடரில் 49 என மொத்தம் 100 சதங்கள் அடித்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டிலிருந்து 2013ம் ஆண்டில் சச்சின் ஓய்வு பெற்றார். தற்போது, மும்பை இண்டியன்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார்.
Felt great to be back in the nets with @vinodkambli349 during the @tendulkarmga lunch break!
It sure took us back to our childhood days at Shivaji Park...