[X] Close

முதலமைச்சர் செல்லும் வழி: ஆறாக ஓடிய நீரை அரை மணி நேரத்தில் அகற்றிய அதிகாரிகள்

Officers-removed-water-from-road

சேலம் நகரில் முதலமைச்சர் செல்லும் பாதையில் ஏற்பட்ட குடிநீர்க் குழாய் உடைப்பால் தேங்கிய நீரை, மாநகராட்சி அதிகாரிகள் அரை மணி நேரத்தில் அப்புறப்படுத்தினர்.


Advertisement

சேலம் மாநகரின் குடிநீர்த் தேவைக்காக நங்கவள்ளி கூட்டு குடிநீர்த் திட்ட குழாயோடு, தனிக் குடிநீர்த் திட்ட குழாய் இணைக்கப்பட்டுள்ளது. கந்தம்பட்டி கேபி.கரடு அருகே இந்த குழாய்கள் இணைக்கப்பட்ட பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. முழங்கால் அளவுக்குத் தண்ணீர் ஓடியதால் நெடுஞ்சாலையி‌ல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்த பாதை வழியே முதலமைச்சர் வர இருப்பதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக அங்கு விரைந்து, பிரதான குழாய்க்குச் செல்லும் தண்ணீரை நிறுத்தினர். சாலையில் தேங்கியிருந்த நீரை அரை மணி நேரத்தில் டேங்கர் லாரி மூலம் உறிஞ்சி எடுத்தனர். சற்று நேரத்தில் அந்த சாலை வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கார் கடந்து சென்ற பிறகே, பொக்லின் இயந்திரம் மூலம் குழிதோண்டி, உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close