Published : 01,May 2017 09:53 AM
சசிகலா குடும்ப நிகழ்ச்சியில் 3 அமைச்சர்கள்: அதிருப்தியில் ஓபிஎஸ் அணி

சசிகலா குடும்பத்தினர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் 3 தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டது அதிமுகவின் இரு அணிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெற சசிகலாவின் குடும்பத்தினர் அந்த கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படவேண்டும் என ஓ பன்னீர்செல்வம் அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையில் நேற்று சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் படம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சசிகலாவின் கணவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் துரைகண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், எம்எல்ஏக்கள் ரெங்கசாமி, கருணாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனால் சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.