[X] Close

சர்ச்சை பேச்சு... கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி

Petition-against-Kamal-Hassan-rejected-in-delhi-high-court

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கமலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


Advertisement

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்கு பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.


Advertisement

இதனிடையே கமலின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக பாஜகவின் அஸ்வினி உபாத்யாயா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாட்டில் நடந்த விவகாரத்திற்கு சென்னைக்கு பதிலாக டெல்லியில் ஏன் வழக்கு தொடர்கிறீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அத்துடன் கமல் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Advertisement

Advertisement
[X] Close