
பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் சேர்த்து பால் கொடுத்தால் அரசு திவாலாகிவிடும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பழனி -கொடைக்கானல் சாலையில் ஆவின் பாலகத்தை திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் சீனிவாசன், சத்துணவுடன் பால் வழங்க வாய்ப்பில்லை. பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்கினால் அரசு திவாலாகும்’ எனத் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.