[X] Close

“அரசியலை விட்டு விலக தயார்” - தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்

Dmk-leader-MK-Stalin-condemned-tamilnadu-bjp-leader-tamilisai

பாஜகவுடன் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவுடன் நான் பேசி வருவதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். அதேபோல், “தமிழிசை அல்லது நரேந்திர மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார்” என்றும் சவால் விடுத்துள்ளார். 

           


Advertisement

மேலும் அந்த அறிக்கையில், “காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதி திமுக உறுதியாக உள்ளது. ராகுல் காந்தியை முதன் முதலாக பிரதமர் வேட்பாளராக அறிவித்தது திமுகதான். தொடர்ந்து பிரதமர் மோடி, பாஜகவை திமுக விமர்சித்து வருகிறது. ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் திமுக இரட்டிப்பு உறுதியில் உள்ளது. 

          

தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பா.ஜ.கவிற்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த திருமதி தமிழிசை சவுந்திரராஜன் இப்படியொரு “பொய்” பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close