கால்களை தரையில் இழுத்தபடியே நடந்து செல்லும் வாட்சனின் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி.
இப்போட்டியில் சென்னை வீரர் வாட்சன், 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வாட்சன், கிட்டத்தட்ட ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் நின்றார். ரன் அவுட் முறையில் வாட்சன் ஆட்டமிழந்ததால் போட்டியின் போக்கே மாறியது.
சென்னை அணி தோல்வி அடைந்ததால் வாட்சனின் போராட்டம் வீணானது. அந்தப் போட்டியின் போது வாட்சன் காலில் அடிபட்டதை யாருமே கவனிக்கவில்லை. இது குறித்து வாட்சனின் புகைப்படம் ஒன்றை சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யவே ரசிகர்களுக்கு தெரியவந்தது. அதன்பின் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாட்சனுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலில் அடிபட்ட வாட்சன் தனது சொந்த ஊருக்கு புறப்புட்டுச் சென்ற போது கால்களை தரையில் இழுத்தபடியே நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. காலில் ஆறு தையல்கள் போடப்பட்டதாக ஹர்பஜன் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த வீடியோ சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வாட்சன் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டு பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
Loading More post
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?