Published : 12,Jan 2017 02:30 AM
விவசாயிகளுக்காக ஒருநாள் ஊதியத்தை வழங்கும் அரசு பணியாளர்கள் ..!

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர்.
தமிழக அரசின் டி பிரிவு ஊழியர்கள் 2 லட்சத்து 48 ஆயிரம் பேர் தங்கள் ஒருநாள் ஊதியத்தை விவசாயிகளுக்கு வழங்க பிடித்தம் செய்துக்கொள்ளுமாறு முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கம் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பாக இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.