Published : 01,May 2017 06:47 AM

விற்பனைக்கு வருது தண்ணீர் ஃபிளைட்

China-made-world-biggest-amphibious-aircraft-finishes-1st-glide-test

அதிக கொள்ளளவு நீரை எடுத்துச் செல்லும் ராட்சத விமானம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது.

தெற்கு சீனாவில் உள்ள ஸுஹாய் நகரில் உருவாக்கப்பட்ட ஏஜி 600 ரக விமானம் முழுமையாக வடிவமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 37 மீட்டர் நீளமும், 53.3 டன் எடை கொண்ட இந்த விமானம் உலகின் மிகப் பெரிய விமானம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில் 370 டன் தண்ணீரை நிரப்பும் வகையில் கொள்ளளவு கொண்ட டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ, பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படும் போது வான்வழியாக தண்ணீர் தெளிக்க இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. மே மாதம் இறுதியில் இந்த ராட்சத விமானம் விற்பனைக்கு வரவுள்ளது. இதுவரை 17 விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்