வேலூரில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற இவரிடம், லிப்ட் தரும்படி மின்னல் கிராமத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர் கேட்டுள்ளனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி, வினோத் மற்றும் பார்த்திபன் கடுமையாக தாக்கியதில் தட்சிணாமூர்த்தி உயிரிழந்தார்.
இந்தக் கொலை சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கீழ்ஆவதம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை போலீசார் வினோத் மற்றும் பார்த்திபனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
வினோத் மற்றும் பார்த்திபன் கொலை செய்த பின்னர், இருசக்கர வாகனத்தில் சென்ற வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்திய செல்போன் நெட்வொர்க் இடங்களையும் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அரக்கோணம் அடுத்த செய்யூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். தற்போது அவர்களை அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!