[X] Close

கருணாநிதி தொண்டர்களை சந்திப்பார்: ஸ்டாலின்

stalin-said-karunanithi-will-soon-saw-people

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; மருத்துவர்கள் அனுமதித்தால் அவர் தொண்டர்களை சந்திப்பார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒவ்வாமை காரணமாக கடந்த நவம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு பூரண குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பிய அவர் ஓய்வு எடுத்துவருகிறார். இந்நிலையில் அவருடைய பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி அவர் தொண்டர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக திமுக எம்பியும் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அனுமதி அளித்தால் தொண்டர்களை அவர் விரைவில் சந்திப்பார் என கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close