இரண்டு தாதா கோஷ்டிகள் மோதிக்கொண்டதில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் பலியானார்கள். ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
டெல்லியை சேர்ந்தவர் புபேந்திரா. லோக்கல் தாதா. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இவரது நண்பர் அருண். ஒரு வழக்கு தொடர்பாக இவர்களிடம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜய்யும் கான்ஸ்டபிள் குல்தீப்பும் காரில் அமர்ந்து நேற்றிரவு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர் தாதா குரூப்பை சேர்ந்த சிலர், புபேந்திராவை நோக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் புபேந்திரா, அருண், விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கான்ஸ்டபிள் குல்தீப் படுகாயமடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை சரியாகி, பேசினால் மட்டுமே எதற்காக இந்த துப்பாக்கிச்சண்டை நடந்தது என்கிற விவரமும் யார் இதை செய்தது என்கிற விவரமும் தெரிய வரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!