[X] Close

‘வீரம்’ தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி மறைவு

Producer-Venkatrama-reddy-passed-away

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.


Advertisement

பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி. இவர் ‘விஜயா வாகினி’ புரொடெக்ஷ்ன்ஸ் உரிமையாளரான நாகிரெட்டியின் இளையமகன் ஆவார். வெங்கட்ராம ரெட்டி இதுவரை ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’. ‘பைரவா’ ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார். 6-ஆவது படமாக ‘சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உடல்நலக் குறைவால் வெங்கட்ராம ரெட்டி சென்னையில் காலமானார். இன்று மதியம் 1 மணியளவில் அவரின் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வெங்கட்ராம ரெட்டிக்கு பாரதி ரெட்டி என்ற மனைவியும், ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். இவரது இறுதிச்சடங்கு நாளை காலை 7.30 மணிக்க நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட்ரா ரெட்டியின் மறைவிற்கு திரைப்படத் துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close