மக்களவைத் தேர்தலில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் இன்று தொடங்கியது.
17-ஆவது மக்களவைத் தேர்தலில் இதுவரை 5 கட்டங்களாக 424 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில் 59 தொகுதிகளில் இன்று ஆறாவது கட்டத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும் டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பீகார், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் 968 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆறாம் கட்டத் தேர்தலுக்காக இந்த 7 மாநிலங்களிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெற விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?