சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’மிஸ்டர். லோக்கல்’ படத்துக்கு தணிக்கை குழு, யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
’வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம், ’மிஸ்டர். லோக்கல்’. யோகி பாபு, ராதிகா, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். எம்.ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்தை, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சாதாரண இளைஞனான மனோகருக்கும் (சிவகார்த்திகேயன்), வசதி படைத்த கீர்த்தனாவுக்கும் (நயன்தாரா) நடக்கும் மோதல்தான் கதை. ’’நான் இயக்கிய ’சிவா மனசுல சக்தி’ படத்தை மாஸாக உருவாகினால் எப்படியிருக்குமோ, அதுதான், ’மிஸ்டர். லோக்கல்’. அந்தப் படத்தின் 2.0 என்றும் இந்தப் படத்தை சொல்லலாம்’’ எனத் தெரிவித்திருந்தார் இயக்குனர் ராஜேஷ். ஆனால், ரஜினிகாந்த், விஜயசாந்தி நடித்த ’மன்னன்’ படத்தின் மார்டன் வெர்ஷனாக இந்தப் படம் இருக்கும் என்று தெரிகிறது.
வரும் 17 ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முயன்று வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழு, அனைவரும் பார்க்கலாம் என்று ’யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!