Published : 11,May 2019 06:52 AM

மானாமதுரையில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை !

The-police-are-investigating-into-the-murder-of-a-young-girl-by-an-burning-of-petrol-in-Maanamadurai-

மானாமதுரை அருகே 35 வயது மதிக்கதக்க இளம் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி விலக்கு பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இருந்த காவலர் ஒருவர், மதுரை- இராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை சாலை அருகே 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் முழுவதும் எரிந்து, இறுதியாக கால் பகுதி மட்டும் எரிந்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Image result for இளம் பெண் எரித்து கொலை

இதனையடுத்து மானாமதுரை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய், உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். 

Image result for இளம் பெண் எரித்து கொலை

பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று மானாமதுரை காவல்துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்