ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்யலாமா? - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு

ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்யலாமா? - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு
ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்யலாமா? - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு

11, 12 ஆம் வகுப்புகளில் மொழிப்பாடம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

9, 10ஆம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றி தேர்வு நடத்தப்படும் என்றும், 11, 12ஆம் வகுப்புகளில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு மொழியை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்ததாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் மொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து புதியதலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், “ 11, 12 ஆம் வகுப்புகளில் மொழிப்பாடம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை. தமிழகத்தை பொறுத்தவரை 6 பாடத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.

இரண்டு மொழிப்பாடத்திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். மொழிப்பாடத்திட்டங்கள் குறித்து எவ்வித ஆலோசனைகளும் நடைபெறவில்லை. தமிழ், ஆங்கிலம் கண்டிப்பாக மாணவர்கள் படித்தே ஆக வேண்டும். வேறு மொழிகளை பற்றி தற்போது எந்த ஆலோசனையும் இல்லை. கல்வியாளர்கள் மூலம் பின்னர் வந்தால் பரிசீலிக்கப்படும். மாணவர்கள் குழம்ப வேண்டாம்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com